விரைவுப்படுத்தப்படும் உள்கட்டமைப்புப் பணிகள்

0
114

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மக்கள் வந்து செல்ல வசதியாக, விமான நிலையம், பேருந்து நிலையம், மற்றும் ரயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. அவ்வகையில் சகாதத் கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. இதைத்தவிர, ராம்ஜானகி பாதை, பக்தி பாதை உள்ளிட்டவற்றுக்கான செயல்திட்டமும் தயாராகி விட்டது. ராமஜென்ம பூமி பாதை 30 மீட்டரும், பக்தி பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவை. ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோயில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு அதற்கான சாலை வசதிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. அயோத்தி நகரின் இந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் எந்தத் தயக்கமும் இன்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகின்றனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்துத் தரப்படுகின்றன. திய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படுகின்றன. யோகி ஆதித்யநாத் ஆய்வு இதற்காக வழங்கப்படும் இழப்பீடு தொகை தொடர்பாக புகார்கள் எதுவும் இல்லை. ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஏராளமான கடைகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here