மகா வைத்தியநாதையர்

0
268

தஞ்சைக்கும், கும்பகோணத்திற்கும் நடுவில் வையச்சேரி என்கிற கிராமத்தில் பஞ்சநாத சர்மா, அருந்ததி ஆகியோருக்கு மகனாக மே 26, 1844 ஆம் ஆண்டு பிறந்தார். வைத்தியநாதையர் ஏழாம் வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை அடைந்தவர். ஒன்பது வயதிற்குள்ளேயே சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம் முதலிய லட்சண நூல்களை ஆராய்ந்தவர். மெலட்டூர், திருவையாறு பகுதியில் வாழ்ந்த வித்வான்களிடம் கற்று, அவர்களின் திறன்களை ஒருங்கே பெற்றவர். இசையுடன் தமிழ், சமஸ்கிருதம் கற்றார். தன் தந்தையிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக் கொண்டார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடம் அதர்வர்ணசரமம், சூரசம்ஹிதை, சதுர்வேத்தாத்பர்ய சங்கிரகம், சிவதத்வ விவேகம் பயின்றார். பழமாநகரி சுந்தர சாஸ்திரிகள், திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியவரிடம் சைவநூல்களைப் பாடம் கேட்டார். வித்வான்களின் முன்னிலையில், சுப்பிரமணிய தேசிகர் வைத்தியநாதய்யருக்கு, மகா என்னும் பட்டத்தை வழங்கினார். நந்தன ஆண்டு தை மாதம் பதினோறாந்தேதி வெள்ளிக்கிழமை (27-1-1893) மகா வைத்தியநாதையர், தமது நாற்பத்தொன்பதாம் வயதில் திருவையாற்றில் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here