மதுரையில், இரண்டு ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, 206 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகரில், 1,685 சிறுவர்கள் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். கடந்தாண்டு, 2,263 பேரிடம் நன்னடத்தை பிரமாண பத்திரம் பெறப்பட்டுள்ளது. நகரில் கடந்தாண்டு நடந்த, 740 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலும், 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். இதில், பலர் கூலிப்படையாக இயங்கி வருவது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.ஆரம்பத்தில் கடை உரிமையாளர்களிடம் ‘மாமூல்’ கேட்டு மிரட்ட ஆரம்பித்து, ரவுடி தொழிலை துவங்கி, அடுத்தடுத்து வழிப்பறி, திருட்டு, வெட்டு, கொலையில் ஈடுபட்டு சிறை செல்கின்றனர். அங்குள்ளவர்களுடன் பழகி, ஜாமினில் வெளிவந்ததும் கூலிப்படையாக செயல்படுகின்றனர்.