உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியில் லவ் ஜிகாத் சீமா கௌதம் என்ற 23 வயது பட்டியல் சமூகப் பெண் ஒருவர், ஷாஜஹான்பூரில் உள்ள டாக்டர் ஷ்ராஃப் கண் தொண்டு மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்தார். அவள் பணியிடத்தில் நவேத் என்ற முஸ்லிம் நபரை சந்தித்தார். சீமாவை தனது லவ் ஜிஹாத் என்ற போலி காதல் வலையில் சிக்க வைக்க நவேத் தன்னை ஒரு ஹிந்துவாக அறிமுகப்படுத்திக் கொண்டார். இருவரும் ஷாஜகான்பூரில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கினர். அப்போது நவேத் தாங்கள் ஒன்றாக இருப்பதை சீமவுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்தார். இந்நிலையில், சீமா கர்பமானார். நவேத் அந்த வீடியோக்களை காட்டி சீமாவை மிரட்டி முஸ்லிம் மதத்தைத் தழுவும்படி வற்புறுத்தினார். ஆனால், சீமா மதம் மாற மறுத்தார். மேலும், தனக்கு நேர்ந்த துயரத்தை தன் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டார். நவேத்தின் மதமாற்ற கோரிக்கையை சீமா ஏற்க மறுத்ததால், நவேத் மற்றும் அவரது கூட்டாளிகளான முஸ்தகிம் மற்றும் ஃபர்ஹான் ஆகியோர் சீமாவுக்கு விஷம் கொடுத்தனர். பின்னர் ஏதும் அறியாதவர்கள் போல சீமாவை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அப்போது சீமாவின்பெயரை தனது மனைவி சோயா சித்திக் என்று நவேத் கூறினார். எனினும் மருத்துவமனையில் சீமா உயிரிழந்ததை அறிந்து நவேத் தனது கூட்டாளி ஃபர்ஹானுடன் தப்பிச் செல்ல முற்பட்டார். அவர்களின் செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.