அஹில்யாபாய் ஹோல்கர்

0
124

மே 31, 1725 அகமத் நகரிலுள்ள சாம்கெட் என்னும் நகரின், இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர். அகில்யாபாயின் கணவர் காண்டே ராவ் ஓல்கர், கும்பர் போரில் 1754-ல் உயிரிழந்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவருடைய மாமனார் மல்கர் ராவும் காலமானார். அதன்பிற்கு ஓராண்டு கழித்து இந்தூர் அரசியாக முடிசூட்டப்பட்டார். தன்னுடைய அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காக்க பாடுபட்டார். தன்னுடைய போர்படையை வழிநடத்துவதிலும் தன்னுடைய வீரத்தை காட்டினார். துகோசி ஓல்கரை தன்னுடைய தளபதியாக நியமித்தார். இவரது 30 ஆண்டு ஆட்சிக்காலத்தில் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியுமாக நடத்தினார், வாழும்போது மரியாதையுடனும், இறந்த பிறகு துறவிபோலவும் கருதப்பட்டார். அகில்யாபாய் கட்டிடக்கலை நுட்பத்தில் ஆர்வமுள்ளவராக இருந்தார். இந்தோர், மகேசுவர் பகுதிகளில் பல கோயில்களை நிறுவினார். இவருடைய ஆட்சிப்பகுதியில் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் கோயில்கள், தர்மசாலை எனப்படும் ஓய்வு விடுதிகள் ஆகியவற்றை உருவாக்கினார். இந்துக்களின் முக்கிய தளமான குஜராத்திலுள்ள துவாரகை முதல், கங்கை நதிக்கரையிலுள்ள காசி விசுவநாதர் கோயில் வரையிலும், உஜ்ஜையின், நாசிக், விஷ்ணுபாத் கோயில், கயா மற்றும் பாராலி பைஜ்னாத் ஆகிய மகாராட்டிரப் பகுதியிலும் கோயில்களை கட்டினார். சோமநாதபுரத்தில் பாழடைந்த சிவன் கோயிலை மீண்டும் கட்டி குடமுழுக்கு செய்தார். கங்கை நீரை பாரதத்தின் அனைத்துக் கோவில்களுக்கு மாதந்தோறும் அபிஷேகத்திற்கு அனுப்பி வைத்தார். பல கோவில்களை மீட்டெடுத்தவர். இந்திய அரசு அஹில்யாபாய் ஹோல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்தோர் விமான நிலையத்திற்கு, தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் என பெயர் சூட்டியுள்ளது. 1999-ம் ஆண்டு இவருடைய படத்தை அஞ்சல் தலையில் பொறித்து மரியாதை செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here