காந்தியின் சத்தியாகிரகம் தொடங்கிய இடத்தில் அதன் 130-வது ஆண்டு விழாவை இந்தியக் கடற்படை நினைவு கூறுகிறது
ஆப்பிரிக்காவின் டர்பன் அருகேயுள்ள பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் 130-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் நிகழ்வில் இந்தியக் கடற்படை பங்கேற்கவுள்ளது. பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் 1893-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற சம்பவத்தின் 130-ம் ஆண்டு நினைவாக, இந்திய கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிசூல், 2023 ஜூன் 06 முதல் 09- தேதி வரை டர்பன் நகருக்குச் செல்கிறது.
மகாத்மா காந்தி 1893-ம் ஆண்டு ஜூன் 07-ம் தேதி ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய சீட்டு வாங்கிய காந்தி, இனவெறியின் காரணமாக பெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இன ஒடுக்குமுறைக்கு எதிரான காந்தியின் போராட்டத்திற்கும், சத்தியாகிரகத்தின் பிறப்புக்கும் இச்சம்பவம் தூண்டுதலாகக் கருதப்படுகிறது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்த முக்கிய தருணங்களைக் கொண்டாடுவதன் மூலம் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவைக் கொண்டாடும் வகையில் ஐஎன்எஸ் திரிசூல் டர்பன் நகருக்குச் சென்றுள்ளது. இந்தப் பயணத்தின் போது மகாத்மா காந்திக்கு பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் மலர் அஞ்சலி செலுத்துவதோடு, இசை நிகழ்ச்சியிலும் ஐஎன்எஸ் திரிசூல் பங்கேற்கும்.