ஜம்மு – காஷ்மீரில் குழந்தைகள், பெண்களை பயன்படுத்தி பயங்கரவாதம்

0
107

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., புதிய ஆபத்தான சதித் திட்டத்தை தீட்டியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளை தங்களுடைய பணிகளுக்கு, ஐ.எஸ்.ஐ., மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன.தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலுக்கும் இவர்களை பயன்படுத்துவதாக ராணுவம் கூறியுள்ளது.இது குறித்து, ஸ்ரீநகரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘சினார் கார்ப்ஸ்‘ என்ற படைப் பிரிவின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் அமர்தீப் சிங் அவ்ஜ்லா கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து ஐ.எஸ்.ஐ., மற்றும் பயங்கரவாத அமைப்புகள், இங்குள்ள பயங்கரவாதிகள் மற்றும் தங்களுக்கு உதவுவோருடன் தகவல்கள் பரிமாறிக் கொள்வது சமீப காலமாக குறைந்தது.வழக்கமான தொலை தொடர்பு வசதிகள் வாயிலாக தகவல் பரிமாறுவது திடீரென குறைந்துள்ளது. நம்முடைய தொழில்நுட்ப உளவுப்பிரிவு இது குறித்து எச்சரிக்கை விடுத்தது.இது போன்ற உதவி செய்யக்கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், ஐ.எஸ்.ஐ., மற்றும் பாக்., பயங்கரவாத அமைப்புகள் புதிய முறையை பயன்படுத்துவது தெரியவந்துஉள்ளது. ஜம்மு – காஷ்மீரிலும், எல்லையிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ராணுவம் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here