சமூக சேவைக்காக 30 செவிலியர்களுக்கு புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்

0
3667

நாடு முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாக பணிபுரியும் செவிலியர்கள், மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஆண்டுதோறும், புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்பட்டு வருகிறது. செவிலியர்களுக்கான மிக உயரிய விருதாகும். 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா, புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.30 செவிலியர்களுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here