தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகர். நேயர்களால் எம். எல். வீ என அன்புடன் அழைக்கப்பட்டவர். பல இந்திய மொழிகளில் வெளிவந்த பாடல்களுக்குப் பின்னணிப் பாடகராக இருந்துள்ளார். மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட எம். எல். வசந்தகுமாரி, குத்தனூர் அய்யா சுவாமி ஐயருக்கும் லலிதாங்கிக்கும் மகளாகப் சூலை 03, 1928 ஆம் ஆண்டு பிறந்தார். தாய் தந்தை இருவரும் இசைக் கலைஞர். சென்னையில் ஆங்கிலப்பள்ளியில் படித்து மருத்துவத்துறையில் நுழைய இருந்தவர், பிரபல பாடகர் ஜி. என். பாலசுப்பிரமணியம் முயற்சியால் இசைத்துறைக்கு வந்துவிட்டார். சங்கீத கலாநிதி விருதினை குறைந்த வயதில் பெற்ற பெண் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. தனது 49 ஆவது வயதில் இவ்விருதினைப் பெற்றார்.சங்கீத நாடக அகாதமி விருது(1970), மைசூர் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்(1976), மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி விருது(1977), சென்னை இசைப்பேரறிஞர் விருது(1978), பத்ம பூஷன் விருது, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருது(1987) போன்ற பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
#சான்றோர்தினம்