தூக்குங்கள் துப்பாக்கியை சுடுங்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்களை – SFI வெறி செயல்

0
218

இவ்வாசகம் இடம் பெற்றுள்ள போஸ்டரை கொல்லதில் உள்ள சவரா கல்லூரியில் இந்திய மாணவர் சம்மேளனம் (SFI) ஒட்டியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அணியான இவர்கள் இந்த போஸ்டரின் வாயிலாக சொல்ல வருவது என்ன? ஆர் எஸ் எஸ் காரர்களைக் கொலை செய்வதற்கு இவர்களுக்கு யார் அனுமதி அளித்துள்ளனர்? 2016 இல் பிணராயி விஜயன் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு (20 மே 2016 முதல் 16 பெப்ரவரி 2022 வரை) அரசியல் காரணங் களுக்காக கேரளாவில் 55 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் ஆர்.எஸ்.எஸ். & பா.ஜ.க. வினர்.மேற்கண்ட தகவலை மாநில உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தேசிய குற்றப்பதிவு அமைப்பும் இதை உறுதிப் படுத்தியுள்ளது. மேற்கண்ட கொலை வழக்குகள் பலவற்றில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் & பாப்புலர் ஃப்ரெண்ட் தீவிரவாதிகளுக்கு எதிராகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சொந்த மாவட்டமான கண்ணூரில் தான் கடந்த 6 ஆண்டுகளில் மிக அதிகமாக 15 படுகொலைகள் நடை பெற்றுள்ளன. அதில் 7 பேர் பா.ஜ.க. தொண்டர்கள் ஆவர். எனவே மேற்கண்ட வாசகம் உள்ள போஸ்டர் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் முழு விசாரணை நடத்திட முன் வர வேண்டும். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here