பாகிஸ்தானிலிருந்து வந்த பெண்ணைத் தொடர்ந்து சீன இளைஞனைக் கைது செய்துள்ளது உ.பி. போலீஸ். வாங் ஹாங்ஜி (Wang Hongji) எனும் ஷாங்காயைச் (சீனா) சேர்ந்த இளைஞன் ஆதி ஷர்மா என்ற பெயரில் நோய்டா (உ.பி.) வில் இருந்து வந்தவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவன் ஆதி ஷர்மா என்ற பெயரில் ஆதார் அட்டை, பான் கார்டு பெற்றுள்ளான். பாஸ்போர்ட் பெற மனு செய்துள்ளான். பாஸ்போர்ட் பெறுவதற்கு முன்பாகவே உ.பி. யின் சிறப்பு அதிரடிப் படையினர் அவனைக் கைது செய்துள்ளனர். போலி ஆதார் அட்டை தயாரித்து வழங்கும் கும்பலைப் பிடித்த போலீசார் அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சீன இளைஞனைக் கைது செய்துள்ளது.கடந்த மாதம் உபி யின் சிறப்பு அதிரடிப் படையினர் போலி ஆவணங்களைக் கொண்டு போலி ஆதார் அட்டை, பான் கார்டு & பாஸ்போர்ட் தயாரித்து வழங்கி வந்த ஒரு குழுவினரை நோய்டாவில் சூரஜ்பூர் பகுதியில் கைது செய்தனர். அக்கூட்டத்தின் தலைவன் அக்பர் அலியின் அலுவலகத்தை சோதனை செய்தனர். அப்போது போலி பெயர்கள், முகவரிகளில் பல திபெத்திய & சீனர்களுக்கு அடையாள அட்டை தயாரித்து அளித்துள்ளது தெரிய வந்தது.