பிரதமர் மோடிக்கு லோகமான்ய திலக் விருது

0
209

திலக் ஸ்மாரக் மந்திா் அறக்கட்டளையால் கடந்த 1983-இல் ஏற்படுத்தப்பட்ட லோகமான்ய திலகா் தேசிய விருது, சுதந்திர போராட்ட வீரா் பாலகங்காதர திலகரின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைவா்களுக்கு வழங்கப்படுகிறது. தேசத்தின் வளா்ச்சி, முன்னேற்றத்துக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்குபவா்களுக்கு இந்த விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்த விருதை பெறும் 41-ஆவது தலைவா் பிரதமா் மோடி ஆவாா். நாடு முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்மநிர்பர் பாரத் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் இந்த விருது வழங்கப்படுவதாக திலக் நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அம்மாநில முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.சரத்பவார் பங்கேற்க உத்தவ் தாக்கரே சிவசேனா தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவர் கலந்து கொள்வது உறுதி என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here