பேராசிரியர் ரமணி பரசுராமன் காலமானார்.

1
119

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சென்னை மாநகரத் தலைவராக இருந்தவர். ஆங்கிலப் பேராசிரியர். குருநானக் கல்லூரி, ப்ரிஸ்ட் யூனிவர் சிட்டி மற்றும் தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக் கழகங்களில் பணியாற்றி யவர். என்.சி.சி.யில் பல உயர் பொறுப்புகள் வகித்தவர். கல்விக் கொள்கையில் மாற்றம் தேவை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர். மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற கல்வி சம்பந்தப்பட்ட பல கருத்தரங்குகளில் பங்கேற்று உள்ளார். நேதாஜி, சுவாமி விவேகானந்தர் மீது அபரிமிதமான பற்று கொண்டவர். எப்போதும் எவரைப் பார்த்தாலும் வந்தே மாதரம், ஜய் ஹிந்த் என்று கூறுவார். மாணவர்களுக்கு மிகவும் பிரியமான ஒரு பேராசிரியர்.சென்னை கோபாலபுரத்தில் வசித்து வந்தார். சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்து வந்தார். இன்று அதிகாலை மாரடைப்பினால் காலமானார்.
பேராசிரியர் ரமணியின் மறைவுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகள்.

1 COMMENT

  1. பேராசிரியர். ரமணி பரசுராமன் அவர்கள் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது இதயம் கனத்த அனுதாபங்கள்.
    அவரது மறைவு கல்வித்துறை, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், ஆகிய பல அமைப்புகளுக்கு ஒரு மாபெரும் இழப்பு. இறைவன் இந்த இழப்பை நிச்சயமாக ஈடு செய்வார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here