செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள்

0
1336

15-ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரமாண்ட விழா நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்க எம்.பி.க்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க எம்.பி.க்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோரது தலைமையில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு இந்தியா வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு செல்வதுடன், மும்பை, ஐதாராபாத் ஆகிய நகரங்களுக்கு சென்று வணிகம், தொழில்நுட்பம் மற்றும் அரசு துறைகள் சார்ந்த பிரநிதிகளையும், பாலிவுட் நட்சத்திரங்களையும் சந்திப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here