மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தமிழகம் வருகை

0
177

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாளை ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சர்வதேச இளைஞர் தின கொண்டாட்டங்களில் அமைச்சர் பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார், மேலும் தெற்காசியாவின் இளைஞர்களுடன் Pro Planet தாக்கத்தை உருவாக்குவது குறித்த குழு விவாதத்திற்கும் தலைமை தாங்குவார். இந்த ஆண்டு இளைஞர்களுக்கான பசுமைத் திறன்கள் என்பது ஐ.நா.வின் கருப்பொருள், தெற்காசியா முழுவதிலும் உள்ள பங்கேற்பாளர்கள் விவாதத்தில் கலந்துகொள்வார்கள். UNICEF இன் ரீஜினல் டைரக்டர் சஞ்சய் விஜேசேகர நிகழ்வில் உரையாற்றுவார். அமைச்சர் தாக்கூர் நாளை சென்னையில் ஊடக பிரிவுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரு. அனுராக் தாக்கூர் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியையும் காணவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here