வாஜ்பாய் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மலர்தூவி மரியாதை

0
435

முன்னாள் பிரதமர் அடக் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 16) அனுசரிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் 140 கோடி மக்களுடன் இணைந்து அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் முன்னேற்றத்தை உயர்த்துவதற்கும், பல்வேறு துறைகளில் 21ம் நூற்றாண்டுக்கு நாட்டை எடுத்துச் செல்வதற்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முக்கிய பங்காற்றி உள்ளார்’ எனத் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here