உலகம் முழுவதும் ஒரே குடும்பம் – ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர்

0
230

உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதற்கு ஏற்ப, தனது பார்வையை கொண்டு பாரதம் இன்று அமைதி மற்றும் வளர்ச்சியை உலகிற்கு வழங்கி உள்ளது. அதில் ஒன்றுதான் இன்று நம் அனைவருக்கும் ஆனந்தத்தை கொடுத்துள்ளது. கடின உழைப்பு மட்டுமின்றி தங்களது செயல்பாட்டால் நமது விஞ்ஞானிகள் இந்த அளவிற்கு வந்துள்ளனர். அதனால் அவர்களுக்கும் அவர்களுக்கு உதவிய அரசு நிர்வாகத்திற்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதம் எழும், உலகம் அனைத்திற்காகவும் எழும். மேலும் பாரதம் அறிவுசார் மற்றும் ஆன்மீகம் உலகம் முழுவதும் தழைக்க காரணமாக விளங்கும். இது இப்போது உண்மையாகி கொண்டிருக்கிறது. இந்த நோக்கம் நிறைவேற நாடு முழுவதும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சுதந்திர அமிர்த மகோத்ஸவத்தின் காலத்தில் நம் கண் முன்னே அந்த உன்னத மகோத்ஸவத்தை கண்டோம். எனவே நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆகிறோம் இதிலிருந்து நாம் இன்னும் முன்னேற வேண்டும் முன்னேறுவதற்கான உற்சாகம், திறமை , பார்வை அனைத்தும் நம்மிடம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here