உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அமைச்சர் திடீர் திட்டங்களை அறிவிப்பது பக்தர்களை ஏமாற்றும் வேலை – இந்து முன்னணி

1
204
மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல், அறநிலையத்துறை அமைச்சர் திடீர் திட்டங்களை அறிவிப்பது பக்தர்களை ஏமாற்றும் வேலை – இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டன அறிக்கை.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளை கொடுத்து பரபரப்பாக ஊடகங்களில் வலம் வருகிறார். இவ்வாறு ஊடகங்களில் பரபரப்பான செய்திகளை வரவைத்து விட்டால் மக்களுக்கு உண்மையாக தெரிய வேண்டிய விஷயம் மறைக்கப்பட்டு விடும் என்பதற்காக இதுபோன்ற விளம்பரமான வேலைகளை செய்கிறாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மேதகு.திரு.ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு சமீபத்திய ஒரு வழக்கில் 225 பக்கங்கள் அடங்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில் நிதியை சம்பளம், விழாக்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நிலங்களை யாருக்கும் கொடுக்கவோ, விற்கவோ அனுமதியில்லை கோவில் நிலங்களை, தானம் வழங்கியவரின் விருப்பத்திற்கு மாறாக விற்பனை செய்தல் கூடாது. கோவில் நிலங்களை பொறுத்தவரை, பொது நோக்கம் என்ற அம்சத்தை எடுத்து வரக்கூடாது. சிறப்பு தீர்ப்பாயம் அமைத்தல் என்பது உட்பட 75 வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை தோற்று விட்டது என்றும் நீதியரசர்கள் விமர்சித்துள்ளனர்.

இவைகளையெல்லாம் நிறைவேற்ற முயற்சிக்காமல் அமைச்சர் திரு.சேகர்பாபு அவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக, மக்களை குழப்புவதற்காக, பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காக பல விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். உண்மையில் தமிழின் மீதும், தமிழகத்தின் மீதும் அக்கறை இருக்கும் பட்சத்தில் மதச்சார்பற்ற அரசு என்ற முறையில் கோவிலில் தமிழில் அர்ச்சனை என்பதோடு அனைத்து அரேபிய, உருது மொழிகள் புழங்கும் மசூதிகள் முதல் ஹீப்ரு புழங்கும் தேவாலயங்கள் வரை தமிழிலேயே வழிபாடு இருக்கவேண்டும் என்று அறிவித்திருக்கவேண்டும். அனைத்து ஆலய வளாகத்திலும் தமிழிலேயே அர்ச்சனை செய்யப்படும் என்று பதாகை வைப்பதாகவும் அரசு அறிவித்துள்ள நேரத்தில் அனைத்து மசூதிகளிலும், சர்சுகளிலும் தமிழிலேயே தொழுகை நடத்தப்படும் என்றும் பதாகை வைக்கவேண்டும். அனைவரும் தமிழர்கள் எனும்போது எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இருக்கவேண்டும் என்பது தான் முறை அதுதான் சமநீதியும் கூட. ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒவ்வொரு மரபு இருக்கிறது. தமிழகம் தாண்டி பாரதம் முழுக்கவும், பாரதம் தாண்டியும் இந்துக்கள் செய்யும் கோவில்கள் அனைத்திற்கும் தனித்தனி வழிபாட்டு விதிமுறைகள் உள்ளன. அவற்றை மாற்றவோ, நீக்கவோ வேறு எவருக்கும் உரிமை கிடையாது. காலம் காலமாக வரும் பாரம்பரியங்களில் எப்படி அரசு தலையிட முடியும்? PLACES OF WORSHIP ACT (1991) சட்டத்தின்படி கோவில்களில் எம்மாதிரியான வழிபாட்டு முறைகள், சமய ஒழுங்கு (தன்மை) நடைமுறையில் உள்ளனவோ அதை யாராலும் மாற்ற முடியாது என்று உள்ளது. எனவே ஆகம விதிமுறைகளின் அடிப்படையில் உள்ள கோவில்களின் சமய ஒழுங்கு (தன்மை) கெடும் வகையில் புதிய நடைமுறைகளை கொண்டு வருவது முற்றிலும் சட்ட விரோதமானது. குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்து ஆலயங்களின் நிர்வாகம் மட்டுமே அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர இந்து ஆகமவிதிகளிலும், வழிபாட்டிலும் குறிக்கிடும் உரிமை இல்லை.

இந்த அறிவிப்புகள் தமிழகத்தில் இந்து ஆலய உரிமைகளுக்கு விடப்படும் மிரட்டல், ஒரு மததுவேஷம் என மக்கள், பக்தர்கள் கருத துவங்கிவிட்டனர். தற்போதைய அரசு உண்மையான மதச்சார்பற்ற அரசு என்று பிரசாரம் வருகிறார்கள். எனவே பாரபட்சமின்றி தமிழகத்தில் உள்ள மசூதிகள், சர்சுகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களையும் அரசு கையிலெடுக்க வேண்டுமென இந்து முன்னணி கோருகிறது. தமிழ் வாழ்க என்று பதாகைகள் வைத்து தமிழ் வளர்க்க நினைக்கும் தமிழக அரசு, தமிழ் பல்கலைக்கழகம் ரூ 100 கோடி கடனில் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் அதைப்பற்றி கவலைப்படாமல் கோவில் விவகாரங்களில் மறைமுக காழ்புணர்ச்சியுடன் தலையிட நினைப்பது ஏன்? என பக்தர்கள் கேட்கின்றனர். தமிழ் வழிபாட்டு மொழி ஆக வேண்டும் என அரசு கருதினால் அதை எல்லா தலங்களிலும் செய்ய வேண்டும். அதுதான் தமிழை காக்கும், தமிழை வளர்க்கும் என்பது எண்ணம். ஆகவே அரசியல் ஏமாற்று விளையாட்டுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்துகிறது. நன்றி வணக்கம்

1 COMMENT

  1. I’m not sure where you are getting your information, but good topic.
    I needs to spend some time learning more or understanding more.
    Thanks for wonderful information I was looking for this
    info for my mission.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here