நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில், மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில், 50க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. அவற்றில் மழையின் போது தேக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அணைகள் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆவதால் புனரமைக்கும் பணி நடக்கிறது. அதன்படி, உலக வங்கியின், 227 கோடி ரூபாய் கடனில், 27 அணைகளில் கரைகளை பலப்படுத்துதல், தண்ணீர் கசிவு ஏற்படுவதை தடுத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. நீலகிரியில் குந்தா பாலம், கோவையில் காடம்பாறை, கன்னியாகுமரியில் கோதையாறு ஆகிய அணைகளில், அணுகு சாலை அமைப்பது உள்ளிட்ட பணிக்கு கூடுதலாக, 50 கோடி ரூபாய் வழங்குமாறு, உலக வங்கியிடம் மின் வாரியம் சமீபத்தில் கேட்டிருந்தது; அதற்கு, ஒப்புதல் கிடைத்துள்ளது.அதில் கூடுதலாக, 50 கோடி ரூபாயை தமிழகத்திற்கு வழங்குவதாக, உலக வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது’