இன்று சர்வதேச சமஸ்கிருத தினம்; உலகம் முழுதும் கொண்டாட்டம்

0
179

உலகின் மிகவும் பழமையான மொழிகளில் தமிழும் சமஸ்கிருதமும் முக்கியமானவை. சமஸ்கிருதத்தில் ஆர்யபட்டர் எழுதிய சூர்ய சித்தாந்தா என்ற நுால் சூரிய குடும்பம் குறித்தும், அவற்றின் இயக்கம் குறித்தும், இடையேயான தூரம் குறித்தும் தெரிவிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு சமஸ்கிருதம் உதவுவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தை கொண்டாடவும் அதனை இளைய சமுதாயத்திடம் கொண்டு செல்லவும் சர்வதேச சமஸ்கிருத தினம் உலக அளவில் கொண்டாடப்படுகிறது. சமஸ்கிருத பாரதி என்ற அரசு சாரா அமைப்பு சர்வதேச அளவில் 42 வருடங்களாக பயிற்றுவித்து வருகிறது. சமஸ்கிருதத்தில் 10 நாட்களில் உரையாட ஸம்பாஷண ஷிபிரம் என்ற பேச்சு பயிற்சி வகுப்பு, கீதா சிக்ஷன கேந்திரம் மூலம் நேரடி வகுப்புகள். அஞ்சல் வழி கல்வி மூலம் சமஸ்கிருதம் படிக்கலாம். பாலபாரதி திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. ஆன்லைனில் பாலகீர்வாணி வகுப்புகள், சிறுவர்களுக்கான பாலகேந்திர வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆவணி பவுர்ணமியான இன்று உலக சமஸ்கிருத தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here