அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் தயாராகிக் கொண்டிருந்த போதே 1949 ஆம் வருடம் ஜூலை 24 முதல் 31 முடிய மாபெரும் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. தேசத்தின் பெயர் பாரதம், தேசிய கீதமாக வந்தே மாதரம் பாடல், தேசிய மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு கருத்துக் கணிப்பை நாடெங்கிலும் நடத்தியது. தேசத்தின் பெயர் பாரதம் என்பதற்கு ஆதாரவாக 43,54,077 (97.11%) பேர்களும், இந்தியா என்பதை ஆதரித்து 98,256 (2.54%) பேர்களும் வாக்களித்திருந்தனர் . ஒரு வாரம் நடைபெற்ற இதில் மொத்தம் 44,61,458 பேர் கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். மற்ற இரண்டு விஷயங்களிலும் கூட பொது மக்கள் வந்தே மாதரம் பாடல், ஹிந்தி மொழிக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர். கருத்துக் கணிப்பு தமிழகம் உட்பட நாடெங்கிலும் நடைபெற்றுள்ளது.