தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் சென்னையில் கைது செய்யப்பட்டார். திருவள்ளூவர் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இவரது பேச்சு சமூகவலை தளத்தில் பரவியது. அதிகாலையில் சென்னை திநகர் போலீசார் ஆர்பிவிஎஸ் மணியனை அவரது இல்லத்தில் கைது செய்தனர். இவர் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆவார். இவரது கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.