பேச்சு போட்டி என்ற பெயரில் அரசு கல்லூரி மாணவிகளிடம் வலுக்கட்டாயமாக சனாதன எதிர்ப்பை திணிக்க முயன்ற தமிழக அரசு முயற்சி, கடும் எதிர்ப்பையடுத்து வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் அரசியலை திணிக்கும் தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் குவிந்தன. இதனை தொடர்ந்து, திருவாரூர் திரு.வி.க.,அரசு கல்லூரி முதல்வர் சார்பில் இன்று (செப்.,13) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ‘கல்லூரி மாணவிகள் சனாதனம் பற்றிய முதல்வரின் சுற்றறிக்கையின்படி அல்லாமல், சொந்த விருப்பத்தின் பேரில் மேற்காண் பொருள் குறித்து செயல்படுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்’ என கூறப்பட்டுள்ளது.