இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா – கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.அமெரிக்க நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது நட்பு நாடுகள், இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கனடா விரும்பியது. முக்கியமாக அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கனடா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை ஏற்க பைடன் நிர்வாகம் மறுத்துவிட்டது. பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா எவ்வளவு முயன்றும், இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது