வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

0
108

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் வருகிற 23-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். மைதானம் 30 ஏக்கர் பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here