பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து மாபெரும் வெற்றி பெறவைத்த பாஜகவை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த நடவடிக்கை தேசத்தை “வலுவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும்” மாற்றுவதற்கு, வகை செய்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 20 -ம் தேதி நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பாஜக கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு, ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகியுள்ளன. வெறும் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மேல் சபையில் இந்த மசோதாவின் சிறப்பு குறித்துப் பேசினார். அப்போது, அரசியலமைப்பு 128 -வது திருத்தத்திற்கு விளக்கம் அளித்தார். அத்துடன், உரிய நடைமுறைகளுக்குப் பின்பு செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
முன்னதாக, இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு, பாரதப் பிரமதர் மோடி உறுப்பினர்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பெண்களின் அதிகாரம் மற்றும் சம பங்களிப்பை உறுதி செய்யும் ‘நாரி சக்தி வந்தன் ஆதினியம் 2023’ ஐ நிறைவேற்றியுள்ளதன் மூலம் பாரதத்தின் பாராளுமன்றம் புதிய வரலாறு படைத்துள்ளது.
இது ஒரு முக்கியமான முடிவு, மேலும் நாட்டின் ஜனநாயக அமைப்பை வலிமையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும், இந்த அற்புத முடிவை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் வரவேற்கிறது. இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கிறோம். பெண்களின் பங்கேற்பு நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பரிமாணங்களை சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா மூலம், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு கொடுக்கப்படும். இது அரசியல்ரீதியாகவும், பாராளுமன்றத்திலும் பெண்களின் பங்களிப்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகப்படுத்தும். இதன் மூலம் பெண்களுக்குச் சம உரிமை மற்றும் பாலின சமத்துவத்தைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்கமுடியும்.
எனவேதான், பெண்களுக்கு சம உரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை நாரி சக்தி வந்தன் சட்டம் 2023 ஐ நிறைவேற்றி நமது பாரதம் புதிய வரலாறு படைத்துள்ளது.
பாரதத்தின் இந்த சிறந்த நடவடிக்கைக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பரிணாமங்களைச் சேர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது