ராணுவத்திற்கு 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்கத் திட்டம்.

0
209

உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.பீரங்கிப் படையணியை மேம்படுத்தும் நோக்கில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறு பாதுகாப்புஅமைச்சகத்துக்கு ராணுவம் பரிந்துரை செய்துள்ளது.இதற்கு முன்னதாக ஏற்கனவே 307 ATAGS எனப்படும் இழுவை பீரங்கி வாங்குவதற்கான டெண்டரையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.பழைய போஃபர்ஸ் பீரங்கிகளுக்குப் பதிலாக சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் ATAGS மற்றும் ஹோவிட்சர் பீரங்கிகளைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here