தேசமே முதன்மையானது, ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே பேச்சு

0
140

சின்மயா மிஷன் சார்பில் சுவாமி சின்மயானந்தரின் 108வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற அக்டோபர் 3 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் , சின்மயா மிஷன் ஸ்வாமிஜி ஸ்ரீ மித்ரானந்தா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே ஆகியோர் பங்கேற்றனர்.

சுவாமி மித்ரானந்தா பேசுகையில், “தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்று தான் என்று குறிப்பிட்டார். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேசத்திற்கு பணியாற்றுவதே தங்கள் முதல் கடமையாக கருதி பணியாற்றுகிறார்கள். சுவாமி சின்மயானந்தா மற்றும் குருஜி கோல்வால்கர் இருவருக்கும் இடையே ஒருமித்த சிந்தனை இருந்தது” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தத்தாத்ரேயா ஹொசபலே “ஆர்.எஸ்.எஸ். மற்றும் சின்மயா மிஷன் இரண்டும் ஒரே வகை அமைப்புகள் என்றார். இரு கண்களும் ஒரே காட்சி காண்பது போல, இரு காதுகள் ஒரே விஷயத்தை கேட்பது போல, இரு நுரையீரல் ஒரே சுவாசம் போல, பின்னிப்பிணைந்த அமைப்புகள் என்றார்.

சுவாமி சின்மயானந்தர் பகவத் கீதை யக்ஞம் மூலம் சாமான்யர்கள் மத்தியில் கீதையை எடுத்து சென்றதை நினைவு கூர்ந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் சின்மயா மிஷன் இணைந்து செய்து வரும் நற்பணிகளை பற்றியும் பேசினார். சுவாமிஜி அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அளித்த ஊக்கம் பற்றியும் தெரிவித்தார்.

தேசபக்தியும், தெய்வபக்தியும் ஒன்றே தான். இந்த தேசத்தின் விடுதலைக்கு தியாகம் புரிந்த அனைவரும் அதை உறுதியாக நம்பினர் என்று குறிப்பிட்டார். இந்த தேசத்தின் ஒவ்வொரு மண்ணும் புனிதம், தேசத்திற்கு போராடி தூக்கு மேடை ஏறியவர்கள், கையில் கீதையுடனும், உதட்டில் புன்முறுவலுடனும் ஏறினர், மீண்டும் இதே பாரத பூமியில் பிறக்க வேட்கை கொண்டனர் என்றார் . நமது முழுமையான வரலாறு, பள்ளி, கல்லூரிகளில் கற்பிக்கப்படவில்லை எனவும் பேசினார்.

தற்போது தேசம் மிளிர்ந்து வருகிறது, எழுச்சி பெற்று வருகிறது. பாரதீயர்கள் மத்தியல் தேச பக்தியை உருவாக்கவே ஆர்.எஸ்.எஸ். உருவானது என்றார்..
தேசம் என்பது வரைகோடுகள் மட்டுமல்ல, அது தர்மம், ஆன்மா, மக்களின் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. சனாதன தர்மம் தான் நமது தேசியம் என்றார் மகான் அரவிந்தர். ஆனால் பலர் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. இது அறியாமை அல்ல, மாறாக திட்டமிட்ட சதி.

தேசம் என்பது நிலப்பரப்பு, மக்கள் மற்றும் அதன் காலாகாலமாக உருவான கலாச்சாரம், இந்த மூன்றும் ஒன்று சேர்ந்ததே ராஷ்ட்ரம் எனப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். துவக்கப்பட்டதன் நோக்கம் இவற்றை வலுப்படுத்த தான். புகழோங்கிய பாரதம் உருவாக வேண்டும் என்பதே அதன் லட்சியம்.

தேசமே நமக்கு முதன்மையானது. அதனுடன் நமக்கு பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்பு உள்ளது. இதுவே நமது கலாச்சாரம், இதையே ஹிந்து, சனாதனம், பாரதீயம் என பல பெயர்களில் அழைக்கிறோம். ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இந்த மண்ணுடன் நீண்ட தொடர்பு உள்ளது. அனைத்து மாநிலங்களிலுமே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ராமர், கிருஷ்ணர் என பெயர் சூட்டுகிறார்கள்.

சோசியலிஷ்ட் ராம் மனோகர் லோஹியா இதே போன்ற ஒரு கருத்தை பிரதிபலித்துள்ளார். ராமர் தெற்கில் இருந்து வடக்கையும், கிருஷ்ணர் மேற்கில் இருந்து கிழக்கையும் இணைகிறார்கள். சிவனும், சக்தியும் பாரதம் முழுவதும் இருக்கிறார்கள் என்றார்.

கல்வி, மருத்துவம், சுற்றுசூழல் பாதுகாப்பு, குடும்ப அமைப்பு இவற்றுடன் கோவில்கள், கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்க்கை முறை இவை அனைத்துமே நமது நெறிமுறையுடன் இணைந்தவை தான்.

கல்வி, மருத்துவம், திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஆர்.எஸ்.எஸ்., சின்மயா மிஷன் மற்றும் ஏராளமான ஆன்மீக அமைப்புகள் பணியாற்றி வருகின்றன என்றார் தத்தாத்ரேயா .

1964-ல் விஸ்வ ஹிந்து பரிஷத் துவக்கப்பட சுவாமி சின்மயானந்தர் அளித்த பங்களிப்பையும், அதன் முதல் செயல் தலைவராகவும்அவர் செய்லபட்டதை நினைவு கூர்ந்தார் ஹொசபலே.

ராமஜன்மபூமி இயக்கத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்தவர் சுவாமி சின்மயானந்தர், அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பதை தனது கடமையாக கருதினார் அவர் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஒரு தேசம் மக்களின் தியாகம், உணர்வு, சிந்தனை இவற்றால் உருவாகிறது. குருஜி கோல்வால்கர் மற்றும் சுவாமி சின்மயானந்தா இருவரும், தேசமே முதன்மை எனும் ஒரே லட்சியத்தை அடைய வெவ்வேறு மார்க்கங்களில் பணியாற்றினர் என்று குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here