செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம்

0
1610

சென்னை சோழிங்கநல்லுார் அடுத்த செம்மஞ்சேரியில், 105 ஏக்கரில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கு கலந்தாலோசகர் தேர்வு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. சென்னையில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பெரிய அரங்குகள் உள்ளன. சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்தும் அளவுக்கு, இந்த அரங்குகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அனைத்து விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், போட்டிகள் நடத்துவதற்கும் தனியாக விளையாட்டு நகரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., நிதியில் சென்னையில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை போன்ற இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. நவ., இறுதிக்குள் கலந்தாலோசகர் இறுதி செய்யப்பட்டு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவங்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here