இஸ்ரேலில் இருந்து ”ஆபரேஷன் அஜய்” மூலம் இன்று 235 இந்தியர்கள் தாயகம் வருகை

0
100

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 7-வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி உள்ளது. போர் நடக்கும் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். சிறப்பு விமானம் மூலம் இந்தியர்களை பத்திரமாக மீட்டு வர ”ஆபரேஷன் அஜய்”: எனும் திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இதன்படி நேற்று(அக்.,13) முதல் விமானம் மூலம் 212 இந்தியர்கள் வந்தனர்.2வது விமானம் மூலம் இன்று(அக்.,14) 235 பேர் டில்லி விமான நிலையம் வந்தடைந்தனர். டில்லி விமான நிலையம் வந்தடைந்தோரை மத்திய இணையமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here