சுப்பிரமணியன் சந்திரசேகர் அக்டோபர் 19, 1910 ஆம் ஆண்டு தற்போது பாகிஸ்தானிலிருக்கும் லாகூரில் பிறந்தவர். சிறந்த வானியல்-இயற்பியலாளர். விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும், வில்லியம் ஃபௌலருக்கும் 1983 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வியல் போன்றவற்றில் சிறந்து விளங்கினார். வானவியலில் நட்சத்திரங்களின் எடையைக் குறித்து ஒரு வரையறை செய்தார். அது சந்திரசேகர் வரையறை என்று அழைக்கப்படுகிறது.வெள்ளையான சிறிய நட்சத்திரம் அதிக எடையுடன் இருப்பதால், அதன் உட்கரு ‘அணுகுண்டு’ போல வெடித்து பிரகாசமான ‘சூப்பர் நோவா’ என்ற நட்சத்திரங்களைத் தோற்றுவிக்கும் என்று கண்டுபிடித்தார்.பால்வெளி வீதியில் நட்சத்திரங்கள் பொருட்களின் நகர்தலை எவ்வாறு பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்தார். இதன் மூலம் நட்சத்திரங்களின் சுற்றுச்சூழல் புரிந்து கொள்ள முடிந்தது.
#subrahmanyanchandrasekhar