இராமலிங்கம்பிள்ளை

0
75

#இராமலிங்கம்பிள்ளை #நாமக்கல்கவிஞர்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அக்டோபர் 19, 1888 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.1930 ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். ‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.
#venkataramaramalingam #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here