இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் நடந்த நிகழ்வுகள், ஜனவரி 26 அன்று கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு மற்றும் நர்மதைக் கரையில் ஒற்றுமை நாள் கொண்டாட்டங்கள் ஆகியவை தேச எழுச்சியின் மூன்று சக்திகளாக மாறியுள்ளன. ஏக்தா நகருக்கு வரும் மக்கள் இந்த பிரமாண்ட சிலையைப் பார்ப்பது மட்டுமல்லாமல், சர்தார் படேலின் வாழ்க்கை, தியாகம் மற்றும் ஒற்றுமையான இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் அறிகிறார்கள். நாடு முழுவதும் ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தில்’ லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். 140 கோடி இந்தியர்களிடையே இந்த ஒற்றுமை ஓட்டத்தைப் பார்க்கும்போது, சர்தார் படேலின் லட்சியங்கள் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உறுதியின் வடிவில் நமக்குள் ஓடுவது போல் தெரிகிறது. சுதந்திரத்திற்கு முன்பான 25 ஆண்டுகளில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவுக்காக தன்னை தியாகம் செய்திருக்கிறார்கள். இந்தியா சாதனைகளின் புதிய உச்சத்தில் உள்ளது. ஜி20 மாநாட்டில் இந்தியாவின் திறமையை கண்டு உலகமே வியப்படைந்துள்ளது. பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.