நவம்பர் 19,26 ஆகிய தேதிகளில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

0
5175

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய நிலையில், அதற்கு தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது. உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று (நவ.,06) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வாதம் அப்போது ‛‛பேரணிக்கான பாதை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. மசூதி உள்ளிட்ட மற்ற வழிப்பாட்டு தலங்கள் இருக்கக்கூடிய பகுதிகளின் வழியாக பேரணி செல்ல அனுமதி கேட்கின்றனர்” என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, ‛‛பேரணி எங்கு துவங்கி எங்கும் முடியும் என்பது குறித்த தகவல்களை வரும் 9ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்” என ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here