அழ.வள்ளியப்பா

0
229

நவம்பர் 7, 1922 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் பிறந்தார். குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். 1940 ஆம் ஆண்டில் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. ஜ. ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழில் “ஆளுக்குப் பாதி” என்னும் தம் முதல் கதையை எழுதினார். 1941 -ல் சக்தியில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கி, பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். வங்கிப் பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here