இஸ்ரேல் தரை வழியே ஊடுருவி ஹமாஸ் சுரங்கப்பாதைகள் அழிப்பு

0
1284

காசாவில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தற்போது தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி உள்ளது. இந்நிலையில், காசாவில் மக்கள் தொகை அதிகமுள்ள மையப் பகுதியில், இஸ்ரேல் படைகள் தீவிரமாக தரைவழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டமைத்துள்ள சுரங்கப்பாதைகளை கண்டறிந்து தாக்குதல் நடத்தி வருவதாக, இஸ்ரேல் தெரிவித்துள்ளது.”காசாவில், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டமைத்துள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிக்க, வெடிக்கும் சாதனங்களை பயன்படுத்தி வருகிறோம். ”பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள், உட்கட்டமைப்பு, தகவல் தொடர்பு அறைகள் உள்ளிட்டவற்றை அழிப்பதே இலக்கு,” இதற்கிடையே, இஸ்ரேல்- – ஹமாஸ் போர் குறித்து விவாதிக்க, விரைவில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாடுகளை நடத்த, மேற்காசிய நாடான சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here