இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையேயான மோதல் நீடித்து வரும் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், எங்களுடைய பணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரை நாங்கள் வெற்றி பெற விடமாட்டோம். இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து, இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இஸ்ரேல் பாதுகாப்பு படையின் வீரர்கள் காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், மருத்துவமனை உள்பட வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு, பீரங்கியை தாக்கி அழிக்க கூடிய ஏவுகணைகளை செலுத்தினர்.எனினும், போர் ஹெலிகாப்டர் ஒன்றின் உதவியுடன் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பாக சென்று, ஏவுகணை தாக்குதல் தொடுத்தவர்களை வீழ்த்தினர்.இவை தவிர, பீரங்கி குண்டுகள் மற்றும் பீரங்கியை அழிக்கும் ஏவுகணைகளுக்கான ஏவு தளங்கள் ஆகியவையும் தாக்குதலில் அழிக்கப்பட்டன.