‘பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்’ தமிழகத்துக்கு சிறந்த செயல்திறன் விருது

0
1470

நாட்டில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை வலுப்படுத்த, ‘பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்’ செயல்பாட்டில் உள்ளது. இது, மத்திய அரசு 60 சதவீதம்; மாநில அரசு, 40 சதவீத பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், தனி நபர்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள், புதிய தொழில் துவங்க அல்லது, ஏற்கனவே நடத்தி வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய, 10 சதவீதம் பங்களிப்பு தொகையுடன், 35 சதவீதம் மானியமாக, அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் மானியத்துடன், கடனுதவி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தனிநபர் பிரிவின் கீழ், 8,410 பேருக்கு, கடன் ஒப்பளிப்பு செய்து, 152.20 கோடி ரூபாய் மானியம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை, உலக உணவுத் திருவிழா நடந்தது. இந்நிகழ்ச்சியின் இறுதி நாளில், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில், சிறந்து செயல்பட்டு வரும் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, சிறந்த செயல் திறனுக்கான விருது, ஜனாதிபதியால் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here