தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டிசம்பர் 17 முதல் 30 -ம் தேதி வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்வில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பாரதம் வலிமையான நாடாக உருவாகி வருகிறது. பிரதமர் மோடியையும், பாரத நாட்டையும் உலக நாடுகள் பலவும் பாராட்டுகின்றன. பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை உலக நாடுகள் போற்றுகின்றன. அந்த அளவு பெருமை வாய்ந்தது.
மேலும், உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்று நமது பாண்பாடு பறைசாற்றுகிறது. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின்னர் நமது பண்பாட்டைப் பலர் மறந்துவிட்டனர்.
காசிக்கும், தமிழக மக்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்பு உள்ளது. கங்கை முதல் காவிரி வரை இருந்த தொடர்புகளை நாம் மீட்க வேண்டும். அதற்கான உறுதிமொழியை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.