ருக்மிணி லட்சுமிபதி டிசம்பர் 6, 1892 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை . இவர் சென்னை மாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் பெண் உறுப்பினர், முதல் பெண் அமைச்சர். 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1930ல் வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் இவர். ஜூலை 15, 1937ல் நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில், வெற்றி பெற்று சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 1, 1946 முதல், மார்ச் 23, 1947 வரை சென்னை மாகாணத்தின் பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு இப்போது ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1997ல் இவர் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
Home Breaking News உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்ற முதல் பெண் தியாகி ருக்மிணி லட்சுமிபதி