அரசு ஆவணங்களில் இருந்து உருது பெர்ஷியன் சொற்களுக்கு மாற்றாக எளிமையான ஹிந்தி சொற்கள் பயன் படுத்திட உத்திரப் பிரதேச அரசு முடிவு. உத்திரப்பிரதேச அரசின் இம்முடிவினால் அனைத்து அரசு ஆவணங்கள், பத்திரப் பதிவுகள் போன்றவற்றில் இனி உருது, பெர்ஷியன் சொற்களின் பயன்பாடுகள் அகற்றப்பட்டு தகுந்த ஹிந்தி சொற்கள் பயன் பாட்டிற்கு வரும். சப்-ரிஜிஸ்ட்ரார் பதவிக்கு வருபவர்கள் பணி நிரந்தரமாகிட உருது மொழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலை மாறுகிறது. இனி உருது மொழித் தேர்வு எழுத வேண்டியதில்லை. கடந்த 25-30 வருடங்களில் ஹிந்தி திரைப் படங்களில் உருது மொழியின் ஆதிக்கம் கோலோச்சி வருகிறது. இதை உடைத்து மாற்றம் கொண்டு வர வேண்டும்.