முண்டாசுக் கவிஞன் – சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாள் இன்று (11.12.1882)
பத்திரிக்கை ஆசிரியர்,சமூக சீர்திருத்தவாதி,தீர்க்கதரிசி.தனது எழுத்துக்களால் பெரும் எழுச்சியை ஏற்படுத்திய புரட்சிக்கவிஞர்.
இளம் வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்று விளங்கியதால் பாரதி என பட்டம் பெற்றார். தந்தை சின்னசாமி அவர்களின் பஞ்சு ஆலையை முடக்கி அவர் இறந்து போனதை கண்டு பிரிட்டிஷ் ஆதிக்கத்தை விரட்ட வேண்டும் என உறுதி பூண்டவன்.
சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளம், ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். அதனால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர். சிறிது காலம் தமிழாசிரியராக பணியாற்றினார்.சென்னை சென்று சுதேசிமித்திரன் பத்திரிக்கை ஆசிரியரானார்.நண்பர்களுடன் சேர்ந்து இந்தியா எனும் பத்திரிக்கை துவக்கி நாட்டின் அவல நிலைகளை எடுத்துரைத்தார்.
பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமென குரல் கொடுத்த நிவேதிதாவை குருவாக ஏற்றுக்கொண்டார்..”என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” – என்று பாட்டின் மூலமும், எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் விடுதலைத் தீயை அனல் பறக்க செய்தவர் பாரதி..கனகலிங்கம் என்ற ஹரிஜன சிறுவனுக்கு பூணூல் அணிவித்து சமுதாய புரட்சி ஏற்படுத்தினார்.ஜாதி பேதமற்று அனைவரிடமும் சமமாகப் பழகி சமுதாய ஒற்றுமைக்காக பாடுபட்டார்.. இவரை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என காந்திஜியே கூறினார்.சுதந்திரத்திற்கு முன்பாகவே “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் – என்று” பாடிய தீர்க்கதரிசி.
#SubramaniaBharati #bharathiar #சான்றோர்தினம்