போராட்டங்களில் பங்கேற்பதையே ஒரு முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளார். விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டம் யோகேந்திர யாதவ் நடத்திய போராட்டம் என போராடங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவு செய்து விளம்பரம் செய்து கொள் வதில் முன்னணியில் இருந்து வந்தவர். சம்யுக்த கிசான் மோர்ச்சா நீலம் ஆசாத்தை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சொல்லியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் யார் உள்ளனர் என்பது இப்போது புரிந்திருக்கும். நாடாளுமன்றத்திற்கு உள்ளும் வெளியே யும் வன்முறையில் ஈடுபட்டவரை எப்படி ஆதரிக்க முடியும்? முழு விசாரணை நடந்த பிறகு மேலும் பல உண்மைகள் வெளிவரும்.