விஜய் திவஸ் – மேஜர் ஜெனரல் ஹர்தேவ் சிங் களர்

0
200

Major General Hardev Singh Kler: 1971 ஆம் ஆண்டு போரின்போது 95 வது மௌண்டைன் ப்ரிகேடு கமாண்டர் பொறுப்பில் இருந்தார். கண்ணிவெடி தாக்குதலில் 30 அடி உயத்திற்கு தூக்கி எறியப்பட்டு கீழே வீழ்ந்தவர். கடுமையான காயங்கள் ஏற்பட்ட போதிலும் பாகிஸ்தான் சரணடையும் வரை போர்க்களத்தில் இருந்தவர். கண்ணிவெடி தாக்கியதில் உள்காயங்களால் பாதிக்கப்பட்ட அவரது இடது கால் அகற்றப்பட்டது. இடது கால் அகற்றப்பட்டது பற்றி அவரிடம் கேட்கப்பட்டதற்கு, அதனால் என்ன? வங்கதேசத்தினர் விடுதலை பெற்றுள்ளனரே. நான் வெறும் ஒரு காலை மட்டும்தான் இழந்துள்ளேன் என்று பதில் அளித்தார். மேஜர் ஜெனரல் ஹர்தேவ சிங் களர் அவர்களுக்கு மஹா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here