விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த ராம் பிரசாத் பிஸ்மில் 1897ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பிறந்தார். இவர் சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு ஆகிய புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ‘மாத்ரிவேதி’ என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார். இவர் சுவாமி தயானந்த சரசுவதியால் எழுதப்பட்ட சத்யார்த் பிரகாஷ் என்ற புத்தகத்தால் கவரப்பட்டு ஆர்ய சமாஜ் இயக்கத்தில் இணைந்தார். தனது சகாக்களுடன் இணைந்து காகோரி எனும் இடத்தில் ரயிலில் வந்த பிரிட்டிஷ் அரசின் கஜானாவைக் கொள்ளையடித்து அவர்களை திக்குமுக்காடச் செய்தவர். பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு, 1927 டிசம்பர் 19-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
#RamPrasadBismil #சான்றோர்தினம்