ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் மிகப் பழமையான சிவன் சிலை

0
248

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள போர் முகாமில் மேற்கொள்ளப்பட அகழாய்வு பணியில் கடவுளர்கள் சிவன் மற்றும் இந்திராணி இருவரின் சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆரம்பகட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தச் சிலைகளின் காலம், 12-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித உருவில் வடிக்கப்பட்டுள்ள சிலைகளில் இந்திராணியின் சிலை 28 x 13.5 இஞ்ச் அளவிலும் 55 கிலோ எடையோடும் உள்ளது. சிவன் சிலை 21 x 14 இஞ்ச் அளவிலும் 40 கிலோ எடையிலும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தச் சிலையைப் பாதுகாக்க அகழாய்வு துணை இயக்குநர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு போர் முகாமுக்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here