இந்தியப் பெருங்கடல் பகுதியில் சமீப காலமாகச் சீனாவின் உளவு கப்பல்கள் கடும் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. எனவே இதற்கு முடிவுகட்ட இந்தியா தனது கடற்படையின் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி வருகிறது.இதன் வெளிப்பாடாக ஐஎன்எஸ் இம்பால் என்னும் போர்க் கப்பலை இந்தியக் கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. இந்த கப்பல் இன்று மும்பையில் உள்ள கடற்படை தளத்திலிருந்து பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.அந்த வகையில் தற்போது ஐஎன்எஸ் இம்பால் எனும் போர்க் கப்பலைக் களத்தில் இறக்கவுள்ளது இந்தியா. சுமார் 163 மீ நீளமும், 7,400 டன் எடையும் கொண்ட இந்த கப்பல் நாட்டின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.இந்த கப்பலின் சிறப்பம்சமே இதில் இருக்கும் சூப்பர் சோனிக் ஏவுகணைதான். மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் சென்று இந்த ஏவுகணைகள் இலக்கை தாக்கும். இந்த கப்பலின் கட்டுமானத்தில் 75 சதவிகிதம் உள்நாட்டுப் பொருட்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.இதில் நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் வகையில் ஏவுகணைகள் இருப்பதால் கடல் பரப்பில் இந்த கப்பலைத் தாண்டி எதுவும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முடியாது. நம்ப முடியாத குறைந்த காலத்தில் இந்த போர் கப்பல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.ஆங்கிலேயர்கள் காலத்தில், விடுதலைக்காகப் போராடிய மணிப்பூர் மக்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையில் இம்பால் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.