370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னேற்றம்

0
324

குடியரசுத் தலைவர் மாளிகையில் ‘வதன் கோ ஜானோ’ எனப்படும் தேசத்தைத் தெரிந்து கொள்ளுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் குழு நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தது.370 வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மக்களின் முன்னேற்றத்திற்காக அரசு செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் இளைஞர்கள் இந்தியாவின் பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறுவதன் மூலம் தங்கள் கனவுகளை அடைய விரும்புகிறார்கள் என்று கூறினார். ஆனால் இன்றளவும் சில சக்திகள் காஷ்மீர் முன்னேறுவதை விரும்பவில்லை என்று தெரிவித்தார். இருப்பினும், ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கல்வியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்துவதாக கூறினார். அரசின் வளர்ச்சித் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளைஞர் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here