சத்தீஸ்கரில் தாண்டேவாடா, பீஜாப்பூர் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் மாவோவாதிகள் & நக்ஸல்வாதிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. எப்போதெல்லாம் பாஜக ஆட்சி நடை பெறுகிறதோ அப்போதெல்லாம் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் போது மீண்டும் அவர்கள் வெளிப்படையாக வேலை செய்வதும் வாடிக்கை. கிருஸ்துவ மிஷனரிகளுக்கும், நக்ஸல் களுக்கும் எப்போதும் நெருங்கிய தொடர்பு உண்டு.தேர்தலில் இரண்டு அமைப்பினரும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல் படுவர்.சத்தீஸ்கரில் ஆட்சி மாறியதால் நக்ஸல் களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன. சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடாவில் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதலில் 3 நக்ஸல்கள் கொல்லப்பட்டனர். பீஜப்பூரை விடுவிக்கப்பட்ட பகுதியென அறிவித்து நக்ஸல்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அங்கு கட்டப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தையும் போலீஸார் இடித்துத்தள்ளினர்.