புகழ்பெற்ற கணையாழி இலக்கிய இதழை நிறுவிய கி_கஸ்தூரிரங்கன் பிறந்த தினம் இன்று

0
195

கி. கஸ்தூரிரங்கன் ஜனவரி 10, 1933ஆம் ஆண்டு செங்கல்பட்டு, களத்தூரில் பிறந்தவர். தமிழ் இதழாளர், எழுத்தாளர். புகழ்பெற்ற கணையாழி இலக்கிய இதழை நிறுவி நடத்திவந்தார். தினமணி நாளிதழின் ஆசிரியராக இருந்தார். குறிப்பிடத்தக்க கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர்.1961 இல் தில்லிக்குச் சென்று நியூயார்க் டைம்ஸ் இதழின் நிருபராகப் பணியாற்றினார். 1981 வரை அப்பணியில் இருந்தார். 1981 முதல் 1991 வரை தினமணி நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1991 முதல் காந்தி மிஷனின் செயலாளராக பணியாற்றி வந்தார். பொதுச்சேவைக்காக ஸ்வச்சித் என்ற அமைப்பை நிறுவி செங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் களப்பணி ஆற்றினார்தில்லியில் இருக்கும் காலத்தில் அங்கே வாழ்ந்த க. நா. சுப்பிரமணியம், ஆதவன், தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்ற எழுத்தாளர்களின் உதவியுடன் கணையாழி இதழைத் தொடங்கினார்.
#krishnaswamy_kasturirangan #கணையாழி_இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here